தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த எம்எல்ஏ! ஹரியானாவில் சூடுபிடிக்கும் அரசியல்... - ஹரியானா

டெல்லி: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய லோக் தள் கட்சி எம்எல்ஏ ரன்பீர் கங்வா பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்த ஐஎன்எல்டி எம்எல்ஏ

By

Published : Mar 22, 2019, 12:19 PM IST

ஹரியானா மாநிலம் கிஷாரில் உள்ள நால்வா தொகுதி எம்எல்ஏ ரன்பீர் கங்வா நேற்று பாஜகவில் இணைந்தார். இவர் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா ஆகியோர் முன்னிலையில் இணைந்தார்.

இது குறித்து மனோகர் லால் கட்டார் கூறுகையில், மக்களுக்காக சேவையாற்றும் ரன்பீர் கங்வா பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

பாஜவில் இணைந்தது குறித்து ரன்பீர் கங்வா கூறுகையில், சில அரசியல் காராணங்களுக்காக அரசியலிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினேன். பின்னர் என் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து பாஜவில் இணைந்தேன் என்று கூறினார்.


இதன்மூலம் ஹரியானா அரசியலில் தனது காய்களை பாஜக வியூகம் அமைத்து வகுத்துவருவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details