பாலங்கீர் மாவட்டத்தில் ராதாபகால் கிராமத்தில் உள்ள சந்தோஷ் கர்செல் என்பவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தையுடன் தீவிர வாக்குவாதத்தில் நேற்று ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு கட்டத்தில் மரக் கட்டையைக் கொண்டு தந்தையை அடித்துள்ளார். இதனால் உயிர் பயத்தில் வெளியே ஓடிய தந்தை, காப்பாற்றுமாறு கிராம மக்களை அழைத்துள்ளார்.
மண்ணெண்ணெய் ஊற்றி பெற்ற தாயை உயிருடன் கொளுத்திய மகன்!
பாலங்கீர்: தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் படுத்த படுக்கையாக இருந்த தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி மகன் கொலை செய்த சம்பவம், ஒடிசா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் படுக்கையில் நடக்க இயலாத தாயை மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். தன் கண் முன்னே அம்மா, துடிதுடிக்க உயிர் இழந்ததை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, உடனடியாக சந்தோஷ் கர்செல்லை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், தீயில் கருகி இறந்து கிடந்த தாயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது. பெற்றத் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.