தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நான்காவது முறையாக தூய்மையான நகர் விருதை தட்டிச்செல்லும் இந்தூர்! - தூய்மையான நகரம் இந்தூர்

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் நகரம் நான்காவது முறையாக முதலிடம்  பிடித்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தூர்
இந்தூர்

By

Published : Aug 20, 2020, 5:13 PM IST

'தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள், மாநிலங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள், மாநிலங்கள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்தூர் நகரம் முதலிடம் பெற்றுள்ளது. இதனை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில், ”இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக இந்த இடத்தைப் பிடிக்கும் பெருமையை இந்தூர் நகரம் பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாமிடத்தையும் இப்பட்டியலில் பிடித்துள்ளன.

அதேபோல் தூய்மையான மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் மாநிலம் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இந்தூர் நகரும், இந்தூர் நகர மக்களும் தூய்மைக்கு முன்னுதாரணமாக விளங்கிறார்கள். இந்த மிகச்சிறந்த செயல் திறனுக்காக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஷிவ்ராஜ் மக்கள், அரசியல் தலைமை மற்றும் மாநகராட்சி அலுவலர்களை பாராட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details