இந்தியா-ஃபிரான்ஸ் இருநாடுகளும் 17ஆவது முறையாக இணைந்து கடந்த ஒன்றாம் தேதி அன்று வருணா என்ற கூட்டுப் பயிற்சியை தொடங்கின. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இந்தப் பயிற்சியானது தற்போது மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் மிக் 29 கே, ஃபிரான்சின் ரஃபேல் போர் விமானங்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தியா-ஃபிரான்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி நிறைவு - இந்தியா-பிராஸ்
கோவா: இந்தியா - ஃபிரான்ஸ் நாட்டு கடற்படைகளின் முதற்கட்ட கூட்டுப் பயிற்சி, கோவாவில் நேற்று நிறைவுபெற்றது.
கூட்டுப்பயிற்சி நிறைவு
ஃபிரான்சின் சார்லஸ் டி காவ்ல்லே (Charles de gaulle) விமானம் தாங்கி போர்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்தியப் பெருங்கடலில் சீனா, ஆதிக்கம் செலுத்துவதை எச்சரிக்கும் விதத்திலும், இருநாடுகள் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை பறைசாற்றும் வகையில் இந்தப் பயிற்சி அமைந்தது. 10 நாட்கள் நடந்த வருணா கூட்டுப் பயிற்சி தற்போது நிறைவு பெற்றது.