குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 183 பயணிகளுடன் இண்டிகோ விமானம் இன்று (ஜன 17) கொல்கத்தா கிளம்பியது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நடுவானில் விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்! - இண்டிகோ விமானம்
போபால்: சூரத்திலிருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டதின் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம்
இந்நிலையில், நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் போபால் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என போபால் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். மேலும், பயணிகள் மாற்று விமானம் மூலமாக கொல்கத்தா அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.