இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஜிடிபி, 2019–20 நிதி ஆண்டுக்கு 5.8 விழுக்காடாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறது. இந்த தகவலை மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார ஜிடிபி வளர்ச்சி 8 விழுக்காடு தொடுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு என்றும் சொல்லி இருக்கிறது.
இந்திய ஜிடிபி சரிவில் இருப்பதாக கணித்த மூடீஸ்..! வெளியான பகீர் தகவல் - இந்திய ஜிடிபி சரிவில் இருப்பதாக கணித்த மூடீஸ்
உலகின் முன்னணி பொருளாதார மதிப்பீடு நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ் இன்று இந்திய ஜிடிபி குறித்து ஒரு பகிர் தகவலை வெளியிட்டிருக்கிறது.
இதுவரை பல்வேறு மதிப்பீடு நிறுவனங்கள், வங்கிகள், பொருளாதார அமைப்புகள் வெளியிட்ட கணிப்புகளிலேயே மூடீஸ் நிறுவனத்தின் கணிப்பு தான் மிகக் குறைவு. இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சில காலாண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சி குறைவு, இந்தியாவின் தேவை அதிகரிக்காதது, நிதிச் சிக்கல்கள் போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூன் 2019 காலாண்டில் குறைந்து இருக்கிறது.
அதோடு தனி நபர் நுகர்வுச் செலவுகள் 18 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.1 விழுக்காடாக சரிந்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் வல்லுநர்கள்.
TAGGED:
indias weaker growth