இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அப்பகுதியில் உள்ள முக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேந்திர குமார் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், ''கிராமப்புற பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சியே நாட்டை சுயசார்பாக மாற்றும். கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு, குடிசைத் தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும். மக்கள் மத்தியில் சுதேசி எண்ணம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் காலநிலை, நிலம், நம்பிக்கை, பாரம்பரியம், வலிமை என அனைத்தும் அதிகமாக உள்ளது. அதனைக் கொண்டு நாம் உறுதியாக நமது எண்ணங்களை நிறைவேற்றினால், இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதில் எவ்வித கடினமும் இருக்காது.