தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 15 கோடியை தாண்டிய கரோனா பரிசோதனை! - India's COVID-19 tally rises to 97.64 lakh

இந்தியாவில் இதுவரை மொத்தமாக 15 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 726 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Dec 10, 2020, 12:54 PM IST

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக குறைந்துவருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 521 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி 412 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 லட்சத்து 67 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 92 லட்சத்து 53 ஆயிரத்து 306 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 64 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தில் கரோனா பாதிப்பு எட்டு லட்சத்து 96 ஆயிரமாக உள்ளது.

இதுவரை மொத்தமாக 15 கோடியே 7 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 9 லட்சத்து 22 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details