தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனாவால் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு - Corona virus

டெல்லி: இந்தியாவில் கரோனாவால் குணமடைவோர் விகிதம் 75 விழுக்காடாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Covid19 recovery rate in india
Covid19 recovery rate in india

By

Published : Aug 24, 2020, 2:27 AM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், குணமடைவோரின் விகிதமும் அதிகரித்துள்ளது. இதுவரை, 22 லட்சத்து 80 ஆயிரத்து 566 பேர் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைவோர் விகிதம் 75 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, உயிரிழப்போர் விகிதம் 1.86 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 23 விழுக்காட்டினர் மட்டுமே குணமடையாமல் உள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "உலகிலேயே இந்தியாவில் தான் உயிரிழப்போர் விகிதம் குறைவு. குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மருத்துவ பரிசோதனை அதிகரித்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக இது நடைபெற்றுள்ளது.

களத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதனை சாதித்து இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 44 ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவுக்கு மீண்டும் மருந்து' - புதிய தடுப்பூசி சோதனையிலும் வெற்றி கண்ட ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details