இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது சற்று குறைந்துவருகிறது. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிய நோய்த்தொற்றுகளைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இன்று (நவ. 6) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டது. அதில், “இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 84 லட்சத்து 11 ஆயிரத்து 724ஆக உள்ளது.