தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவின் அத்துமீறலைத் தடுக்க முள் வேலி அமைத்த இந்திய ராணுவம்

டெல்லி : எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியப் பகுதிகளில் நுழைவதைத் தடுக்கும் விதமாக முள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Indian troops lay barbed wire
Indian troops lay barbed wire

By

Published : Sep 10, 2020, 12:46 PM IST

இந்தியா-சீன எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே பதற்றம் அதிகரித்துள்ளது. சில நாள்களுக்கு முன் லடாக்கில் இந்திய-சீன எல்லையைத் தாண்டிச் சென்று, பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதிகளில், இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த இந்திய ராணுவம், சீனாதான் எல்லை தாண்டிவந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டாதாக பதிலுக்கு குற்றம் சாட்டியது.

இந்தச் சூழ்நிலையில் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியப் பகுதிகளில் நுழைவதைத் தடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்புப் படையினர்முள் வேலிகளைஅமைத்துள்ளனர். இதுதவிர தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை ராணுவ உயர் அலுவலர்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் தெளிவாக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை அதில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை.

கடந்த செவ்வாய்கிழமை முதலே எல்லைப் பகுதியில் சீனா அதிக அளவில் வீரர்களைக் குவித்துவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், சீன வீரர்கள் தற்போது தெளிவாக கண்ணுக்கு தெரியும் தொலைவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த சனிக்கிழமை சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்தித்து எல்லை நிலைமை குறித்து சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவும் சீனவும் தங்கள் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details