இந்திய ரயில்வே பயணிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2017-18ஆம் நிதியாண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகள் வீதம் ஓராண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ரயில்வே பாதுகாப்பு நிதியான ராஷ்ட்ரிய ரயில் சன்ரக் ஷா கோஷிற்கு ஒதுக்குவதாக அறிவித்தார்.
அதற்காக மத்திய நிதி அமைச்சகம் முதலாம் ஆண்டில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் திரட்டியது. அதன் விளைவாக, ஒதுக்கீடுகள் கால் பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதிலும் பாதித்தொகை மட்டுமே செலவழிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே அறிக்கையின்படி அத்திட்டம் நிறைவேறவில்லை. நிதி பற்றாக்குறை மட்டுமல்லாமல், புதிய வழித்தடங்களை அமைப்பதிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டுகளில் ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள புதிய வழித்தடங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்திருந்தபோது, அதில் 479 கிலோமீட்டர் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 2019-20ஆம் ஆண்களில் அந்த இலக்கு பாதியாகக் குறைக்கப்பட்டது. அப்படியிருந்தும் 278 கிலோமீட்டர் மட்டுமே முடிக்கப்பட்டது. எனவே நிதிகளின் பற்றாக்குறையால் பாதுகாப்புச் செலவு சுருங்கிவருகிறது என்பது தெளிவாகிறது.
வருமானத்தில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ரயில்வே வாரியம் 97 ரூபாயைய் செலவழிக்கிறது. தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறியவும் ரயில்வே வாரியத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, ரயில்வேயின் நிதி நிர்வாகத்தில் முரண்பாடுகள் இருப்பதாக, அதன் தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்திருந்தார்.
அதில், ரயில்வேயின் வருமான, செலவு விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உண்மையில் இந்தக் கணக்கீடுகள் செய்யப்படும் நேரத்தில் தேசிய அனல் மின் கழகம், இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஏழாயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை முன்கூட்டியே பெற்றிருந்தால், இயக்க விகிதம் 102.66 விழுக்காடாக இருந்திருக்கும்.
அடுத்தபடியாக இந்திய ரயில்வே, முக்கியமான சீரமைப்புகள், பழுதுபார்ப்புகளைத் தாமதப்படுத்துகிறது. காரணம் 60 விழுக்காடு பணியாளர்கள் பற்றாக்குறை. முக்கியமாக நாட்டில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே பாலங்கள் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 2016-17 வரை, ரயில்வே மொத்த மூலதனத்தின் 11 விழுக்காடு உள்வளங்கள் மூலம் சேகரிப்பதாக இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அது 3.5 விழுக்காடாக குறைந்தது. அதனால் இந்தாண்டு அதனை 4.6 விழுக்காடாக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் எந்தளவு சாத்தியமானது என்று தெரியாது என்றாலும் ரயில் பயணங்கள் ஆபத்து குறைந்தாகவும், வசதியாகவும் மாற்றுமா என்பது சந்தேகமே. இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு 8.22 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க சாம் பிட்ரோடா குழு முன்மொழிந்தது.