நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி முதல் முறையாக பூடானுக்கு இன்று (ஆக.17) புறப்பட்டுச்சென்றார். அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும் மோடி, பூடான் நாட்டின் நான்காவது மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியாலையும் சந்தித்துப் பேசுகிறார்.
பூடான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி! - மோடி
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
modi
இப்பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பிரதமர் மோடி பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் இடையிலான இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளை பலப்படுத்தும் என்று வெளியுறவுத் துறை ஏற்கனவே கூறியிருந்தது.