தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 11, 2020, 7:45 AM IST

ETV Bharat / bharat

இந்தியர்கள் பங்கேற்கும் விண்வெளி பயிற்சி ரஷ்யாவில் தொடக்கம்!

மாஸ்கோ: விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தில், நான்கு இந்திய பைலட்கள் பயிற்சி பெற ரஷ்யா சென்றுள்ளனர்.

Space training in Russia
Space training in Russia

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு பைலட்கள் ரஷ்யாவிலுள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்திற்குச் (GCTC) சென்றுள்ளனர்.

இந்த நால்வரும் 12 மாதங்கள் நீடிக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்கிறார்கள். இந்தப் பயிற்சியில், சோயுஸ் (Soyuz) ஆளில்லா விண்கலத்தின் அமைப்புகளைப் பற்றியும் அவர்களுக்கு விரிவாகக் கற்றுக்கொடுக்கப்படும்.

மேலும், விண்வெளி பயணத்தின்போது அசாதாரணமான நிலையில் தரையிறங்க நேர்ந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். விமானிகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்திலேயே (GCTC) அளிக்கப்படும்.

இதையும் படிங்க:நாற்காலி உதவி கேட்ட 75 வயது மூதாட்டியை மிரட்டிய பைலட் - அதிரடி சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details