கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முஹசின். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பகிஸ்தானி என்ற பயங்கரவாதியுடன் சேர்த்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார்! - terrorists
திருவனந்தபுரம்: இந்தியாவைச் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாதி அமெரிக்க ராணுவத்தால் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வாட்ஸ்ஆப் மூலம் முகமது முஹசின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டவை, "உங்கள் சகோதரர் வீர மரணம் அடைந்துள்ளார். அவரின் விருப்பத்தை அல்லா நிறைவேற்றியுள்ளார். இதனை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டாம். அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் உங்களுக்குதான் தொல்லை கொடுப்பார்கள். இதனை உங்கள் சகோதரர் விரும்பமாட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை திட்டமிட்டு பயங்கரவாதி அமைப்புக்குள் சேர்க்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது கொல்லப்பட்டுள்ள பகிஸ்தானிதான் இந்தியாவின் பல இளைஞர்களை மனம் மாற்றி பயங்கரவாத அமைப்பில் சேர்த்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது