லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னையை சமூகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இந்திய ராணுவக் குழு ஒன்று எதிர்த்தரப்புடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூஷில் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள், இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.