1951 - 1952ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தல் எட்டு கோடி வாக்காளர்களுடன் தொடங்கியது. 2019ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடி ஆகும். எட்டு கோடி வாக்காளர்கள், 1,849 வேட்பாளர்களில் இருந்து 489 மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்தனர். தற்போது 90 கோடி வாக்காளர்கள், 8,040 வேட்பாளர்களில் இருந்து 543 மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். வாக்குச் சீட்டு முறையில் இருந்து மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறைக்கு இந்த ஜனநாயகத் திருவிழா பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் ஒரு முக்கியமான இடத்தில் கூடி தங்கள் வாக்குகளை பதிவு செய்வர். வாக்குகள் ஸ்கோர் போர்டுகளில் காட்டப்படும், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்லடுக்கு மாற்றங்களை கண்டிருக்கிறோம். வாக்களிக்கும் முறை, வெவ்வேறு கட்சிகள், அரசியல் கட்சியின் சின்னங்கள் என பலவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.