பாதுகாப்புப் படையில் உள்ள மகளிர் பலரும் ராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில், காஷ்மீர் உள்ள மகளிருக்கு இந்திய ராணுவம் சார்பாக பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
காஷ்மீரில் வாழும் மகளிரை மேம்படுத்தும் விதமாக இந்திய ராணுவம் சார்பாக ரேசி மாவட்டத்தில் மொகர் பகுதியில் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அந்தப் பயிற்சியில் ரைபிள்கள், பிஸ்ட்டல்கள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.
காஷ்மீர் மகளிருக்கு பாதுகாப்பு பயிற்சி கொடுத்த இந்திய ராணுவம் இது குறித்து ராணுவத்தின் வடக்கு கமாண்டரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''பாதுகாப்புப் படையில் உள்ள மகளிர் பலரும் ராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை தயார்படுத்தும் நோக்கில் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
இதையும் படிங்க:மனச்சோர்விலிருந்து மீள மருத்துவரின் ஆலோசனை என்ன தெரியுமா?