தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காட்டுப்பகுதியில் தீ விபத்து: வனத் துறையினருக்கு உதவிய ராணுவ வீரர்கள்! - வனத் துறையினருக்கு உதவிய ராணுவ வீரர்கள்

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கப் போராடிய வனத் துறையினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காட்டுப்பகுதியில் தீ விபத்து
காட்டுப்பகுதியில் தீ விபத்து

By

Published : Feb 8, 2021, 2:17 PM IST

அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு காமெங் சில்லிபம் மடாலயம் அருகேவுள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்திவந்தனர்.

இதனையறிந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று வனத் துறையினருக்கு உதவிடும்வகையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். துரிதமாகச் செயல்பட்ட வனத் துறையினர், ராணுவ வீரர்களால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கடற்படை மாலுமி கடத்தல்: வனப்பகுதியில் உயிருடன் கொளுத்திய பயங்கரம்!

ABOUT THE AUTHOR

...view details