தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்" - நெட்டிசன்கள் பாராட்டு - பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இந்திய ராணுவ மருத்துவர்கள்

ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்கையில் பிரசவ வலியால் துடித்த பயணி ஒருவருக்கு இந்திய இராணுவ மருத்துவர்கள் இருவர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பிரசவத்திற்கு உதவிய இந்திய ராணுவ மருத்துவர்கள்
பிரசவத்திற்கு உதவிய இந்திய ராணுவ மருத்துவர்கள்

By

Published : Dec 29, 2019, 12:32 PM IST


இந்திய இராணுவ மருத்துவர்கள், கேப்டன் லலிதா மற்றும் 172 ராணுவ மருத்துவமனையின் கேப்டன் அமன்தீப் ஆகியோர் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பயணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். தகவலறிந்த இருவரும் அந்தப் பயணிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் தாய் ரயிலிலேயே அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமன்தீப் ஆகியோரின் இந்த சேவையைப் பாராட்டும் வகையில், இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியைப் பதிவிட்டுள்ளது.

மேலும் 'தேசம்தான் முதலில், நாங்கள் இருக்கிறோம்' (#NationFirst #WeCare) என்ற அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் "எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே" என்று சேவையாற்றும் ராணுவ வீரர்களை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க;

முப்படை தலைமைத் தளபதி பதவி சாதகமா? பாதகமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details