இந்திய விமான படையில் சேர தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. தொழில்நுட்பப் பிரிவைச் சாராத பணிகளுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முகாம், புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் டிசம்பர் 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய விமான படையில் சேர தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு! - Indian Air Force invites online applications
புதுச்சேரி: இந்திய விமான படையில் சேர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Indian Airforce
இதில் பங்கேற்பதற்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணி முதல் நவம்பர் 28 மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.