இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாம் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி துறை உள் அரங்கில் அக்டோபர் 17 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இளநிலை பட்டம் பெற்றவராக இருந்தால் 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவராக இருந்தால் 1992 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.ஏ. - பி.எஸ்சி. - பி.சி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.ஏ. ஆங்கிலம் உளவியல் எம்.எஸ்சி. - எம்.சி.ஏ. பட்டத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணும் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இதில் விண்ணப்பதாரர்கள் திருமணமானவராக இருந்தால், 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.