தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது - வெளியுறவுத்துறை அமைச்சகம் - சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது

டெல்லி: எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மதிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது, சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்

By

Published : Jul 24, 2020, 4:40 AM IST

இந்திய, சீன எல்லையான பிங்கர் 5 பகுதியிலிருந்து படைகளை திரும்பப்பெற சீனா மறுத்துவருகிறது. பதற்றத்தை மேலும் தூண்டும் விதமாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், எல்லைப் பகுதி ஒப்பந்தத்தை மதிப்பதில் இந்தியா உறுதிப் பூண்டுள்ளது என தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இரு நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் விதமாக சீனா, எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை குவித்துவருகிறது. நியாயமற்ற கருத்துகளை தெரிவிக்கும் அதன் தொனியில் மாற்றம் தெரிகிறது. அமைதியை நிலைநாட்டும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மதிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

1993ஆம் ஆண்டிலிருந்து இந்திய, சீன நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ராஜாங்க, ராணுவ ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: அற்புதமான ஆற்றல் அளிக்கும் 9 உணவுகள்!

ABOUT THE AUTHOR

...view details