தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 12:35 PM IST

ETV Bharat / bharat

கோவிட்-19 எதிரான ஆயுர்வேத மருந்தை உருவாக்கி வரும் இந்தியா!

டெல்லி : கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியை ஆயுஷ் அமைச்சகமும், சி.எஸ்.ஐ.ஆரும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் மருத்துவர் டி.சி கட்டோச் தெரிவித்துள்ளார்.

'India trying Ayurveda to fight against COVID-19'
கோவிட்-19 எதிரான ஆயுர்வேத மருந்தை உருவாக்கி வரும் இந்தியா!

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்துடன் பேசிய அவர், “நவீன மருத்துவத்தில் கோவிட் -19 பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மருந்துகளை உருவாக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆகியவை கோவிட்-19க்கு எதிரான நான்கு ஆயுஷ் மருந்துகளை அடையாளம் கண்டு உருவாக்கியுள்ளன. தற்போது, மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றி அவற்றின் மீதான ஆய்வு நடந்து வருகிறது.

அஸ்வகந்தா, யஷ்டிமாடு (முலேதி), குடுச்சி + பிப்பாலி (கிலாய்) மற்றும் ஆயுஷ்-64 ஆகிய இந்த நான்கு சூத்திரங்களும் அடங்கிய ஆயுர்வேத மருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது, இதனால் நோய் மனித உடலில் நுழைவதைத் தடுக்க முடியும்.

கோவிட்-19 அச்சுறுத்தலால் உலகமே திண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வழிகள் குறித்து இந்தியாவின் ​​ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டிருந்த விரிவான வழிகாட்டுதல், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) துணைத் தலைவரும், இடைநிலை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிக்குழுவின் தலைவருமான மருத்துவர் பூஷண் பட்வர்தன் தலைமையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளின் உயர் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அதனடிப்படையில், முழுமையான செயல்முறை ஆய்வு ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு நோய்த்தடுப்பு தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் மருத்துவர் டி.சி கட்டோச் பேட்டி

ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் ஒரு ஒப்பீடு செய்து அஸ்வகந்தா உள்ளிட்ட மருத்துவச் சூத்திரங்களை வல்லுநர்கள் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தொற்றுநோய்களில் அதிக ஆபத்து உள்ள SARS - COV- 2 க்கு எதிரான நோய்த்தடுப்புக்கான அஸ்வகந்தா பயன்படுத்தப்பட்டு வந்தது கவனிக்கத்தக்கது. மேலும், சிகிச்சையளிப்பதற்கான ‘ஸ்டாண்டர்ட் ஆஃப் கேர்’உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர்கூட கோவிட்-19க்கு எதிராக உடல் வலிமையை, நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்ட ஆயுர்வேத மருத்துவத்தைத் தேர்வு செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சுவாரஸ்யமாக, மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில், இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்தில் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக கூறியதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இளவரசர் சார்லஸ் எப்போதும் பாரம்பரிய மருத்துவத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார்.

ஆயுர்வேதத்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க முடியும், இதனால் நோய் மனித உடலில் நுழைவதைத் தடுக்கலாம். ஆயுர்வேதம் உடல் முழுவதும் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பலப்படுத்துகிறது என்பதை இதன் மூலமாக நாம் அறியலாம்”என்றார்.

இதையும் படிங்க :ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details