இந்தியா, சுரினாம் நாடுகளிடையே வணிக முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக சுரினாம் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கலந்துரையாடியுள்ளது.
சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் :சுரினாம் அமைச்சருடன் கலந்துரையாடிய வெளியுறவுத்துறை அமைச்சகம்! - சுரினாம் அமைச்சருடன் கலந்துரையாடிய வெளியுறவுத்துறை அமைச்சகம்
டெல்லி: சுகாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, சுரினாம் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கலந்துரையாடியுள்ளது.
ஏழாவது இந்தியா-சுரினாம் கூட்டு ஆணைய கூட்டம் வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், சுரினாம் வெளியுறவுத்துறை அமைச்சரும், சர்வதேச வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தூதரான ஆல்பர்ட் ஆர் ராம்தின் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் சுகாதாரம், எரிசக்தி, வேளாண்மை, பாதுகாப்பு, கலாசாரம், கல்வி,தூதரக ஒத்துழைப்பு,பாரம்பரிய மருத்துவ முறை போன்ற துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளின் வணிக முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து கருத்துகள் பரிமாறி கொண்டதாகத் தெரிகிறது.