உலகையே ஆட்டம் காணச் செய்துள்ள கரோனா நோய்த் தொற்று, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். சுருக்கமாக, முன்னெப்போதும் கண்டிடாத சுகாதாரத் சிக்கலிலிருந்து விடுபடப் போராடி வருகிறது இந்தியா.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இந்தியா மற்ற நாடுகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் தவிரவில்லை.
இதன் தொடர்ச்சியாக, 25க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை இந்தியா வழங்கி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஏப்ரல் மாதம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் ஆப்ரிக்க மக்களோடு இந்தியா தோளோடு தோள் நிற்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். இது ஆப்ரிக்க நாடுகளுடனான இந்திய உறவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இதையும் படிங்க : மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.