கரோனாவில் சிக்கித்தவித்த ஏழை குடும்பங்களுக்கு உதவுவதற்காக, இந்தியாவும் உலக வங்கியும் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. முன்னதாக, கடந்த மே மாதம் 750 மில்லியன் டாலரை கடனாக இந்தியாவிற்கு உலக வங்கி வழங்கியிருந்தது.
ஒப்பந்தத்தில் கையெழுத்து
கிடைத்த தகவலின்படி, இந்த 400 மில்லியன் டாலர் திட்டம் கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்தில்கொண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பாக டாக்டர் மொஹாபத்ராவும், உலக வங்கி சார்பாக இந்தியாவின் செயல் நாடுகளின் இயக்குநர் (Acting Country Director) சுமிலா குல்யானியும் கையெழுத்திட்டனர்.