நாட்டில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து, ஐந்தாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது.
பொருளாதார நடவடிக்கைக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓய்ந்தபாடு இல்லை. அதே சமயம் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதலாக உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
வைரஸ் தொற்று பாதிப்புடன் தற்போது வரை 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9.304 பாதிக்கப்பட்டுள்ளனர். 260 உயிரிழந்தனர்.
மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும்
மஹாராஷ்டிரா - 74,860-2,587
தமிழ்நாடு - 25,872 -208
டெல்லி - 23,645-606
குஜராத் - 18,100-1,122
ராஜஸ்தான் - 9,652 - 209
உத்தரப் பிரதேசம் - 8,729 - 229
மத்திய பிரதேசம் - 8,588 - 371
மேற்கு வங்கம் - 6,508-345
பிகார் - 4.390-25
ஆந்திரா - 4,080 - 68
கர்நாடகா- 4,063 - 53
தெலங்கானா - 3,020 - 99
ஹரியானா - 2,954 - 23
காஷ்மீர் - 2,857 -34
ஒடிசா- 2.388-07
பஞ்சாப்- 2,376-47