ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சர்வதேச பொருளாதார மாநாட்டில் ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவும், சீனாவும் 80ஆவது இடத்தை பிடித்துள்ளன. முதல் இரண்டு இடத்தை டென்மார்க், நியூ சிலாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றன.
அண்டை நாடான பாகிஸ்தான் 120ஆவது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் பரப்புரைகளின்போது ஊழல் மிகுந்த நாடுகளில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும் அங்கு பணக்காரர்களின் குரலுக்கு அரசு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.