இந்தியா - சீனா பதற்றம், பொருளாதாரம், கோவிட் - 19 சூழல் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இதற்கிடையே, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திய வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.
மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது - ராகுல் காந்தி
டெல்லி: ஜிடிபியில் வரலாறு காணாத வீழ்ச்சி, தலைதூக்கும் வேலையின்மை உள்ளிட்ட மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
- "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத வீழ்ச்சி - 23.9%
- 45 ஆண்டுகளில் இல்லாத அதிக வேலையின்மை
- 12 கோடி வேலை இழப்பு
- மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிலுவைத் தொகை செலுத்தவில்லை
- உலகளவில் நாள்தோறும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு & இறப்பு
- நம் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு" என பதிவிட்டுள்ளார்.