இந்திய, சீன எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், சீன எல்லைப் பகுதியான தர்மா பள்ளத்தாக்கில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா சாலைகளை அமைத்துவருகிறது.
எல்லைப் பகுதியைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் சாலைக் கட்டமைப்புப் பணிகளை மத்தியப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் நிறைவுசெய்துள்ளனர். ஏற்கனவே, ஏழில் ஆறு மேம்பாலங்கள் கட்டப்பட்டுவிட்டன. இதன்மூலம், எல்லைப் பகுதிக்கு முன்பை விட குறைவான நேரத்தில் பாதுகாப்புப் படையினரால் செல்ல முடியும்.