வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐஎப்எஸ் அலுவலருமான ஜெய்சங்கர் எழுதிய 'தி இந்தியா வே: ஸ்ட்ராடெஜிஸ் ஃபார் ஆன் அன்செர்டைன் வேர்ல்ட்' என்ற புத்தகம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதில், இந்திய - பாகிஸ்தான் பிரிவினை, தாமதப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், அணு ஆயுத தயாரிப்பில் ஏற்பட்ட சுணக்கம் ஆகியவற்றின் காரணமாக எளிதாக கிடைத்திருக்க வேண்டிய செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அந்த புத்தகத்தில், "2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி காலத்திலிருந்து தற்போதை கரோனா காலம் வரை உலகம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. நாடு அப்போது பல சவால்களை சந்தித்தது. அதனை எதிர்கொள்வதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியாவின் தரம் உயர்ந்துள்ளது. நாட்டிற்கான நலன்களை அடைவதில் தெளிவு இருந்தாலும், அதனை ஒழுங்காக வெளிப்படுத்த வேண்டும்.