ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 165 சுதந்திர நாடுகள், இரண்டு பிரதேசங்கள் கொண்ட இப்பட்டியலில் 2018ஆம் ஆண்டு, 7.23 புள்ளிகளை இந்தியா பெற்றிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு 6.90 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவில் சீரழியும் ஜனநாயகம்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் - தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்
டெல்லி: மனித உரிமைகள் அதிகளவில் பறிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் பங்கேற்பு, அரசியல் கலாசாரம், மனித உரிமைகள் ஆகியவையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 42ஆவது இடத்தையும் 2017ஆம் ஆண்டு 32ஆவது இடத்தையும் இந்தியா பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரனோ வைரஸ் சோதனை