தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 71 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 732 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

COVID-19 tracker
COVID-19 tracker

By

Published : Oct 12, 2020, 12:52 PM IST

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 732 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 816 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 71 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எட்டு லட்சத்து 61 ஆயிரத்து 853 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

61 லட்சத்து 49 ஆயிரத்து 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 150 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது லட்சத்து 94 ஆயிரத்து 851 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் எட்டு கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 93 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் முழு பலத்துடன் செயல்படும் உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details