இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 70 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!
நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 373ஆக உள்ளது
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரத்து 829 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 940 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 782ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 9 ஆயிரத்து 966ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்
அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதிப்பு 7 லட்சத்து 13 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 7 கோடியே 89 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 11 லட்சத்து 42 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.