இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 80 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் தீவிராகக் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் 82 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"இந்தியாவில் 50 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்" - கொரோனா செய்திகள்
நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து 50 லட்சத்து 16 ஆயிரத்து 520 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே போல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 1,039 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 520 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 6 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 7 கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (செப்.27) மட்டும் சுமார் 7 லட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.