தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது - உலக சுகாதார அமைப்பு

டெல்லி: இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும், ஒரு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டு கணக்கிட்டால் அதில் மிகக் குறைவான அளவிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Jun 22, 2020, 10:33 PM IST

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும், ஒரு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டு கணக்கிட்டால் அதில் மிகக் குறைவான அளவிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு 30.04 ஆக உள்ளது. உலக அளவில் ஒரு லட்சம் தொகையில் 114.67 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 671.24 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஜெர்மனியில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 583.88 பேரும், ஸ்பெனில் 526.22 பேரும், பிரேசிலில் 489.42 பேரும் பாதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு பரிசோதனை செய்யப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இதுவரை 69 லட்சத்து 50 ஆயிரத்து 493 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details