தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வெளியுறவுத் துறையின் அறிக்கை எல்லையில் சீனா ஊடுருவியுள்ளது என்பதற்கான ஆதாரம்" - சிதம்பரம் - சிதம்பரம் ட்விட்டர்

டெல்லி: படைகளை திரும்பபெறும் நடவடிக்கையில் சீனா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை எல்லை பகுதியில் சீனா ஊடுருவியுள்ளது என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram
Chidambaram

By

Published : Jul 24, 2020, 8:30 PM IST

சீனாவுடனான ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் முன்பிருந்த நிலை திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு ஏன் வலிறுத்தவில்லை என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "எல்லை பகுதியில் மீண்டும் அமைதி திரும்ப மேற்கொள்ளப்படும் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் சீனா முழு ஒத்துழைப்பு அளித்து, நேர்மையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது" என்றார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று (ஜூலை24) தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லைப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அங்கிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இதுவரை மிகவும் சரியானது.

ஆனால், மே 5ஆம் தேதிக்கு முந்தைய நிலையை மீட்டெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அந்த அறிக்கையில் ஏதுவும் விளக்கப்படாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இந்த அறிக்கை மே 5ஆம் தேதிக்கு முன்பு வரை (எல்லையில்) நடைமுறையில் இருந்த நிலையை சீனா மாற்றிவிட்டது என்பதற்கான மற்றொரு சாட்சி ஆகும். 'யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை, யாரும் இந்திய பிரதேசத்தில் இல்லை' என்ற கூற்றுக்கான மற்றொரு மறுப்பு இது" என்றும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய-சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் சீன தரப்பிலும் 43 வீரர்கள் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்தத் தாக்குதல் இந்திய பகுதிக்குள் நடந்ததாகவும் சீனா அத்துமீறியதாகவும் இந்திய ராணுவம் குற்றஞ்சாட்டியது. ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் யாரும் ஊடுருவவில்லை என்றார். இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க:'கரோனாவை போலவே சீனா விஷயத்திலும் பேரழிவு நடக்கும்?' - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details