தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை; ராணுவத்தை விலக்கிக்கொள்ள பரஸ்பர முடிவு - கல்வான் பள்ளத்தாக்கு மோதல்

டெல்லி: இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில், இரு தரப்பு ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள பரஸ்பர முடிவை மேற்கொண்டுள்ளன.

Commander-level talks
Commander-level talks

By

Published : Jun 23, 2020, 5:16 PM IST

இந்திய - சீன எல்லைப்பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக நிலவிவந்த பதற்றமான சூழலை தணிப்பதற்கு இரு தரப்பு ராணுவமும் இரு நாள் பேச்சு வார்த்தை நடத்தின. இரண்டாம் நாள் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்ற நிலையில், இரு தரப்பும் பரஸ்பர சமாதான முடிவை எட்டியுள்ளன.

அதன்படி, இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லைப் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தினரை திரும்பப்பெற்றுக்கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பினரிடையே ஆக்கப்பூர்வமான சூழல் உருவாகியுள்ளதாகவும், சமூகமான முடிவை முன்னெடுப்பதையே இரு தரப்பும் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 6ஆம் தேதி இரு தரப்பும் நடத்தியப் பேச்சுவார்த்தையில், சீனா அத்துமீறி குவித்த தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியத் தரப்பு கோரிக்கை வைத்தது. அதற்கு செவி மடுக்காத சீனா, பின்னர் ராணுவத்தை திரும்பப் பெருவதாக முடிவு மேற்கொண்டது.

இந்நிலையில், எல்லையில் படைகளை திரும்பப் பெரும் நடவடிக்கையின்போது இரு தரப்புக்கும் மேற்கொண்ட மோதலில், இந்தியத் தரப்பில் 20 ராணுவத்தினர் வீர மரணமடைந்தனர். சீனத் தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டு ஊடகங்கள் 16 வீரர்கள் மட்டுமே இறந்துள்ளதாகத் தெரிவித்துவருகிறது.

இதையும் படிங்க:யூரியாவை பதுக்கிய கடைக்காரர்... ரெய்டு விட்ட அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details