டெல்லி: லடாக் எல்லையில் உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனத் துருப்புக்கள் உள்ளிட்ட எதிரிகளை கண்காணிக்கும் வகையில், மணாலியிலிருந்து லே பகுதி வரை ஒரு புதிய சாலையை அமைக்கும் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தியா, சீனா இடையே எல்லையில் சச்சரவுகள் நிலவிவருகின்றது. இதனால் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே உத்தரகாண்ட் பகுதியிலுள்ள உயரமான மலைகள் மற்றும் லே பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக மணாலியிலிருந்து லே வரை மாற்று இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது ஸ்ரீநகரில் இருந்து சோஜிலா வழியாக செல்லும் தற்போதைய சாலைகளோடு ஒப்பிடுகையில் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று அரசாங்க வட்டாரங்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
மேலும் துருப்புக்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை அனுப்பும் போது இந்திய இராணுவத்தின் இயக்கத்தை கண்காணிக்க பாகிஸ்தானியர்கள் அல்லது பிற எதிரி நாடுகளுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காது.
தற்போது பொருள்கள் பரிமாற்றம் மற்றும் போக்குவரத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பாதையாக சோஜிலாவிலிருந்து, டிராஸ்-கார்கில் திகழ்கிறது.
இதே பாதை 1999இல் கார்கில் போரின்போது பாகிஸ்தானியர்களால் பெரிதும் குறிவைக்கப்பட்டது. மேலும் சாலையோரம் உயரமான மலைகளில் இருந்த இடங்களிலிருந்து தங்கள் துருப்புக்களால் அடிக்கடி குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புதிய சாலை மணாலியை நிமு அருகே லேவுடன் இணைக்கும். இந்தப் பகுதியை சீனாவுடன் நடந்த மோதலுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹோடான் விமான தளத்தில் திருட்டுதனமாக வீரர்களை நிறுத்திய சீனா!