நாட்டின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 14ஆம் தேதி ’இந்தி திவாஸ்’ நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதுகுறித்து அமித் ஷா, இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி ஒரு மொழிக்கு உண்டு என்றால் அது பெரும்பான்மை இந்தியர்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டும்தான் முடியும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்தியை திணிக்க பாஜக முயல்வதாக பலர் விமர்சித்துவருகின்றனர்.
இந்தி மொழியைவிட இந்தியா பெரிது - அமித் ஷாவுக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி - அசாதுதீன் ஒவைசி
ஹைதராபாத்: இந்தி, இந்து, இந்துத்துவாவைவிட இந்தியா பெரிது என மக்களவை உறுப்பினர் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Amit Shah
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி கூறுகையில், "இந்தியர்கள் அனைவரின் தாய்மொழியும் இந்தி அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பல மொழிகளின் அழகையும் உங்களால் பாராட்ட முடியுமா. இந்திய அரசியலமைப்பு சட்டம் 29படி அனைத்து இந்தியர்களுக்கும் தனி மொழி, கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றும் உரிமைகள் உண்டு. இந்தி மொழி, இந்து மதம், இந்துத்துவா கொள்கையைவிட இந்திய நாடு பெரியது" என்றார்.