தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லெபனானுக்கு நிவாரணப் பொருள்களுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட விமானம்! - லெபனானுக்கு நிவாரண பொருள்களுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட விமானம்

டெல்லி: லெபனான் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசு, மருந்துகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை விமானத்தில் அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

leb
leb

By

Published : Aug 14, 2020, 7:26 PM IST

மேற்காசியாவைச் சேர்ந்த லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், கடந்த வாரம் வெடி விபத்து நடந்தது. இந்த பயங்கர வெடி விபத்தில் சுமார் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்து பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லெபனான் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசு, மருந்துகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், "பெய்ரூட்டில் ஏற்பட்ட துயர வெடி விபத்துக்குப் பிறகு இந்திய அரசு, லெபனான் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. மனிதாபிமான உதவியின்படி 58 மெட்ரிக் டன் அவசர கால முக்கியமான மருத்துவ, உணவுப் பொருட்களை பெய்ரூட்டுக்கு ஐ.ஏ.எஃப். சி17 விமானம் மூலம் அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details