மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பா ஒன்றிய வெளியுறவுத் திட்டத் தலைவர் ஜோசப் போரலுடன் கரோனாவிற்குப் பின்னான பொருளாதார மீட்பு குறித்தும், இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்தின் 15ஆவது மாநாட்டு ஏற்பாட்டு குறித்தும் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
கரோனா நோய்த்தொற்று காலத்தில் மற்ற நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத் தொடர்பை அதிகரித்துள்ளது என இந்தக் கலந்துரையாடலில், பங்கேற்ற வெளியுறவுத் துறைச் செயலாளர் பட்டாச்சாரியா தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "கரோனா பேரிடர் காலத்தில் மற்ற நாடுகளின் மருந்து தேவைக்கு ஏற்ப, அவை வைத்த கோரிக்கையின்படி, அவர்களுக்கு மருந்துகளை அளித்து உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டது.