தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தின விழா - புதுச்சேரியில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி! - சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி

புதுச்சேரி: சுதந்திர தின விழாவிற்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு பாதுகாப்புடன் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி
சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி

By

Published : Aug 10, 2020, 12:35 PM IST

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாநடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

இதனை முன்னிட்டு சுதந்திர தின விழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து காவலர்களும் முகக் கவசம் அணிந்தும், ஒன்றரை அடி இடைவெளி விட்டும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். மேலும் கரோனா பாதிப்பால், இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குன்னூரில் கரோனா விழிப்புணர்வு அட்டை வழங்கும் நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details