இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் 32 பேர், மாஹேவில் 2 பேர் என புதுச்சேரி முழுவதும் மொத்தம் 46 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 12 பேர் குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் தினமும் 2, 3 என கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
'கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வேதனை அளிக்கிறது' - மல்லாடி கிருஷ்ணா ராவ்
புதுச்சேரி: கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 3 என அதிகரித்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
minister-malladi-krishna-rao
மேலும் அவர், புதுச்சேரியில் 6,606 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 6,538 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, மீதம் உள்ளவர்களின் பரிசோதனையின் முடிவு விரைவில் வரும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'புதுச்சேரியில் மதுக்கடை திறப்பிற்கு ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன?'- அதிமுக எம்.எல்.ஏ கேள்வி!