ஜீ20 மாநாடு ஜூன் 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஜப்பானில் உள்ள ஒசகா நகரில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் சென்றார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பயங்கரவாதம் உள்ளிட்டவை ஜி20யின் விவாத பொருள்'..! பிரதமர் மோடி - பயங்கரவாதம்
டெல்லி: பெண்கள் முன்னேற்றம், பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து ஜி20 மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களோடு விவதிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் பயணம் மேற்கொள்ளும் முன் ஜி20 மாநாட்டில் விவாதிக்கக்கூடிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஜி20 மாநாட்டில் பெண்களின் முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகள் குறித்து உலக நாடு தலைவர்களோடு ஆலோசிக்கப்படும்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அடைந்த வளர்ச்சி குறித்தும் விவரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஜி20 மாநாட்டை அடுத்து நடைப்பெறயிருக்கும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டை தான் பெரிதும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்,' இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.