மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளன. இதனையொட்டி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன. பாஜக படகை இத்தேர்தலில் மூழ்கடிக்க காங்கிரஸ் பலத்த வியூகம் வகுத்து வருகிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்? - காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
அந்தவகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். ராகுலின்இந்த அறிவிப்புக்குபரவலான வரவேற்பு இருக்கிறது. எனவே அக்கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு அனைத்து தரப்பினரிடமும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் வெளியிடுவார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.