விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொம்மையார்பாளையம் முந்திரி தோப்பில் இன்று காலை உடல் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
விழுப்புரைத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் எரித்து கொலை - woman murder case
விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
விழுப்புரைத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தை மோப்ப நாய் கொண்டு சோதனையிடப்பட்டது.
அச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன், அவ்விடத்தில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின் அவ்விடத்தை மோப்ப நாய் கொண்டு சோதனையிடப்பட்டது. மேலும் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.