தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நம்பகமான தடுப்பூசிக்கான தேடலில் உலகம் - Oxford corona vaccine latest update

மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், தடுப்பூசியை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான செயல்முறையை முடிக்க 12-18 மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு முடிவில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்ற ஆஸ்ட்ரோஜீனின் சமீபத்திய உத்தரவாதம், ஆபத்தான அவசரத்தை காட்டுகிறது.

In Search of Reliable Vaccine
In Search of Reliable Vaccine

By

Published : Sep 17, 2020, 5:36 PM IST

இந்தியாவில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மற்றும் உலகெங்கிலும் கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருகிறார்கள் என்பது அதன் கட்டுப்படுத்தமுடியாத தீவிர பரவலை காட்டுகிறது.

சரியான தடுப்பூசிக்காக பல்வேறு நாடுகளில் நடக்கும் 140க்கும் மேற்பட்ட சோதனைகளின் வெற்றிக்காக மொத்த மனித இனமும் ஆவலுடன் காத்திருக்கிறது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி பரிசோதனை, இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக கடந்து, மிக முக்கியமான மூன்றாம் கட்ட பரிசோதனையில், எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு தன்னார்வலருக்கு நரம்பியல் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டதால் இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தமது மூன்றாம் கட்ட சோதனைகளை தற்காலிகமாக நிறுத்தியது. பாதுகாப்பு மற்றும் மறுஆய்வுக் குழுவின் உடனடி கண்காணிப்பிற்கு பின்னர் மீண்டும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.

தடுப்பூசி கண்டுபிடிப்பதன் வெற்றி என்பது அதன் ஆராய்ச்சியின் வெற்றியைப் பொறுத்தது. தடுப்பூசி ஆராய்ச்சி பல்வேறு கட்டங்களில் விரிவாக மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வேண்டும். இது போன்ற பல சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பல விஞ்ஞானிகள் கரோனாவிற்கு எதிராக ஒரு சரியான தடுப்பூசியை கண்டுபிடிப்பது எளிதல்ல என்று எச்சரித்து வருகின்றனர்.

தங்கள் நாட்டின் தடுப்பூசி ஆய்வகங்களை சீனா ஊடுருவி வருவதாக வெள்ளை மாளிகை அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டுவது, முழு ஒப்புதல்கள் வருவதற்கு முன்பு சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்ற சீனாவின் அவசர அறிவிப்பு, மூன்றாம் கட்டத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் தடுப்பூசி போடுவதற்கான ரஷ்யாவின் ஏற்பாடுகள், இவை அனைத்தும் உயிர்காக்கும் மருந்து கண்டுபிடிக்கும் வளர்ச்சியில் பல சந்தேகங்களை உருவாக்குகின்றன.

மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், தடுப்பூசியை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான செயல்முறையை முடிக்க 12-18 மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு முடிவில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்ற ஆஸ்ட்ரோஜீனின் சமீபத்திய உத்தரவாதம், ஆபத்தான அவசரத்தை காட்டுகிறது.

அறுபதுகளில் டான்சில் நோய்க்கு சிகிச்சையளிக்கும் தடுப்பூசி, நான்கு வருட விரிவான பரிசோதனைக்கு பின்னர் இறுதி ஒப்புதலைப் பெற்றது. மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் இது குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. HIV-யைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன.

இந்த உண்மைகளை அறிந்திருந்தாலும், இந்திய தடுப்பூசி ஆகஸ்ட் 15ஆம் தேதி கிடைக்கும் என்ற சாத்தியமில்லாத காலக்கெடுவை ICMR நிர்ணயித்ததற்கு பரவலான விமர்சனங்கள் எழுந்தன. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு கட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறியதாக தனது அறிக்கையை பின்னர் மாற்றியது.

சரியான தடுப்பூசிகளைத் தயாரிப்பதில், ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்கா கண்டுபிடித்த மஞ்சள் காய்ச்சளுக்கான தடுப்பூசியைப் பயன்படுத்தியபோது தற்செயலாக அது ஹெபடைடிஸ்-பி நோயை உருவாக்கி, பல வீரர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

போலியோ தடுப்பூசி சோதனைகளின் ஆரம்ப நாள்களில், கவனக்குறைவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அக்டோபர் முதல் வாரத்தில் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தொற்றுகளின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டும் என்று BITS-Pilani மதிப்பிட்டுள்ளது. இது ஒரு பெரிய நெருக்கடியாக மாறி வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான அறிகுறியற்ற நோயாளிகளின் உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் உருவாகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் வைரஸின் மறு தாக்குதல்களைப் பற்றி அச்சம் கொண்டுள்ளன.

இந்த சமயத்தில் தடுப்பூசியின் செயல்திறனில் முழுமையான நம்பிக்கை கிடைக்கும் வரை நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த சூழலில், தடுப்பு மருந்தின் சோதனை தோல்வியுற்றால், அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் சிரமங்களைத் ஏற்றுக்கொள்ள மனிதகுலத்திற்கு சகிப்புத்தன்மை இருக்காது என்பதே யதார்த்தம்.

இதையும் படிங்க:இந்திய ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் ’ஸ்புட்னிக் V’ விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details