தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'டெல்லி, ஆந்திரா... தனி மாநில அந்தஸ்தை நாம் போராடி பெற வேண்டும்!' - ஒற்றுமையின்மை பரப்ப

அமராவதி: டெல்லி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய தனி மாநில அந்தஸ்தை நாம் போராடி பெற வேண்டும் என்று விஜயவாடாவில் பரப்புரை மேற்கொண்டபோது அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

விஜயவாடா பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

By

Published : Mar 29, 2019, 11:21 AM IST

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பாக விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது சந்திரபாபு நாயுடுவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருந்தார்.

அப்போது, வாக்களர்கள் மத்தியில் உரையாற்றியகெஜ்ரிவால்,மோடி ஆட்சியில் சிறு குறு வியாபரிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளார்கள். இதற்கு உதாரணம் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என குற்றம்சாட்டினார்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,ஒன்றாக வாழ்ந்துவரும் மக்களிடையே ஒற்றுமையின்மை, வெறுப்புணர்வு, தேவையில்லாத பகை உணர்வை ஆழமாக விதைக்க பாஜக அரசு பல வழிகளில் முயற்சி மேற்கொண்டுவருகிறது என்றார்.

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்,நடாளுமன்றத் தேர்தல்கள் ஆந்திர மாநிலத்திற்கு மட்டும் முக்கியம் இல்லை; அது ஒட்டுமொத்தம் தேசத்துக்கே முக்கியம் எனக் கூறிய அவர்,ஆகையால் சிந்தித்து வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

டெல்லி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய தனி மாநில அந்தஸ்தை நாம் போராடி பெற வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ABOUT THE AUTHOR

...view details